'எப்படி இருந்த நயன்தாரா இப்படி ஆகிவிட்டாரே?': வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

'எப்படி இருந்த நயன்தாரா இப்படி ஆகிவிட்டாரே?': வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு கடந்த ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்று, இந்த தம்பதி சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளையும் பெற்றுக் கொண்டனர். அதேசமயம், சினிமாவில் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் கதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அதிக படங்களை நடித்து வருகிறார் நயன்தாரா.

அந்த வகையில், அஸ்வின் சரவணன் தயாரிப்பில் அவரது ‘கனெக்ட்’ திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை ஒட்டி நயன்தாராவின் புகைப்படம் படத்தில் இருந்து வெளியானது. இந்தப் புகைப்படத்தில் நயன்தாராவின் தோற்றம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிகவும் இளைத்து காணப்படும் நயன்தாராவின் புகைப்படத்தைப் பார்த்து, ‘முகத்தில் பல அறுவை சிகிச்சை செய்ததால்தான் இவருக்கு முகம் இப்படி ஆகிவிட்டது’ என்ற ரீதியிலும் நயன்தாராவின் பழையப் புகைப்படங்களைப் பகிர்ந்து ‘எப்படி இருந்த நயன்தாரா இப்படி ஆகிவிட்டாரே’ என்றும் இணையத்தில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம், ‘நடிகர்களது திறமையை மட்டுமே பார்க்க வேண்டும். இதுபோன்ற உருவகேலிகள் ஆரோக்கியமானதல்ல’ என்று நயன்தாராவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in