சாலையோர மக்களுடன் கிறிஸ்துமஸ்,புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா: வைரலாகும் வீடியோ

சாலையோர மக்களுடன் கிறிஸ்துமஸ்,புத்தாண்டு கொண்டாடிய நயன்தாரா: வைரலாகும் வீடியோ

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் கிறிஸ்துமஸ் , புத்தாண்டையொட்டி சாலையோர மக்களுக்கு பரிசளித்துள்ளனர்.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை ஒட்டி சென்னை எழும்பூர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பரிசுகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

சென்ன எழும்பூரில் நயன்தாரா, விக்னேஷ்சிவன் இருவரும் வசித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், தற்போது பரிசுகள் அடங்கிய பைகளை இவர்கள் எழும்பூர் சாலையோர மக்களுக்கு நேரடியாகவே கொடுத்தனர். நயன்தாராவை பார்க்க மக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பரிசுகளைக் கொடுத்த பின்பு சிறிது நேரத்தில் அவர்கள் காரில் ஏறி புறப்பட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in