HBD Nayanthara: 'உயிரே உலகமே’ நெஞ்சார வாழ்த்திய விக்னேஷ் சிவன்!

நயன்தாரா- விக்னேஷ் சிவன்
நயன்தாரா- விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா இன்று தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், மகன்கள் உயிர் மற்றும் உலக்குடன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து விக்னேஷ் சிவன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

சிவன் - நயன் ஜோடி
சிவன் - நயன் ஜோடி

தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா இன்று தனது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது மகன்கள் உயிர் மற்றும் உலக்குடன் இவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் இவரது பிறந்தநாள் புகைப்படங்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லி புகைப்படம் ஒன்றை விக்னேஷ்சிவன் பகிர்ந்துள்ளார்.

விக்னேஷ்சிவன் சொன்ன வாழ்த்து...
விக்னேஷ்சிவன் சொன்ன வாழ்த்து...

அந்தப் புகைப்படத்தில் நயன்தாராவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போன்ற கேக் ஒன்று உள்ளது. அதில் உயிர், உலக் மற்றும் நயன்தாரா பெயர் எழுதி அதில் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார் விக்னேஷ்சிவன். இதில் நயன்தாராவுக்கு வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள் கேக் புகைப்படத்தைப் போட்டு ஏமாற்றாமல் சீக்கிரம் பிறந்தநாள் செலிபிரேஷன் புகைப்படங்களையும் பகிருங்கள் எனக் கேட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in