HBD Nanditadas: நடிகை நந்திதா தாஸ் பிறந்தநாள்!

நந்திதா தாஸ்...
நந்திதா தாஸ்...

திறமைக்கு முன் அழகும் நிறமும் இரண்டாம் பட்சம்தான் என்பதை சினிமாவில் அழுத்தமாக நிரூபித்தவர் நடிகை நந்திதாதாஸ். இயக்குநர், நடிகை என் பன்முகம் கொண்டவரின் 53வது பிறந்தநாள் இன்று.

நந்திதா தாஸ்...
நந்திதா தாஸ்...

* மும்பையில் பிறந்த நந்திதா தாஸ் வளர்ந்தது எல்லாம் டெல்லியில் தான். இவரது அப்பா ஜத்தின் தாஸ் புகழ்பெற்ற ஆர்ட்டிஸ்ட். அம்மா வர்ஷா தாஸ் எழுத்தாளர்.

* இந்திய சினிமாவின் சிறந்த இயக்குநர்களாக ரசிகர்களால் கொண்டாடப்படும் மிருணாள் சென், அடூர் கோபால கிருஷ்ணன், ஷ்யாம் பெனகல், தீபா மேத்தா, மணிரத்னம் ஆகியோரது இயக்கத்தில் நடித்திருக்கிறார் நந்திதா தாஸ்.

நந்திதா தாஸ்...
நந்திதா தாஸ்...

* நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நந்திதா தமிழில் ‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘விஷ்வ துளசி’, ‘நீர்ப்பறவை’ என மொத்தம் நான்கே படங்களில் தான் நடித்திருக்கிறார். இதில் ‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படங்களில் அவரது கதாபாத்திரமும் நடிப்பும் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதவை.

* தனது நிறத்திற்காக பலமுறை அவமானங்களை சந்தித்தவர் நந்திதா. இதுகுறித்து, ‘இந்தியர்கள் நிறவெறியர்கள். இது அவர்களில் வேரூன்றியது. இது குறித்தான அழுத்தமும் இங்கு அதிகம் உண்டு. குறிப்பாக, பத்திரிக்கை, டிவி, விளம்பரங்கள், படங்கள் இவற்றில் நிறம் மட்டும்தான் இங்கு முன்னிலைப்படுத்தப்படுகிறது. இது குறித்து நான் வருத்தப்படுகிறேன். நம்மால் முடிந்தளவுக்கு இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்’ என்றார் நந்திதா.

நந்திதா தாஸ்...
நந்திதா தாஸ்...

* இவர் இயக்கிய முதல் படமான ‘ஃபிராக்’ கடந்த 2008ம் ஆண்டு டோரொண்டோ ஃபிலிம் பெஸ்டிவலில் திரையிடப்பட்டது. பின்னர், ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றது.

*சமீபத்தில் ‘அழகி’ திரைப்படம் 20 வருடங்கள் நிறைவடைந்த போது, டெக்னிக்கலாக எனக்கு ஹிட்டான ஒரே படம் ‘அழகி’ தான் என இயக்குநர் தங்கர்பச்சானுக்கு நன்றி தெரிவித்திருந்தார் நந்திதா. படங்கள், இயக்கம் என பிஸியாக வலம் வருபவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in