விவாகரத்துக்குப் பின்னும் அவரை காதலிக்கிறேன்... பிரபல நடிகை நெகிழ்ச்சி பேட்டி!

நடிகை நளினி நெகிழ்ச்சி: 'ராமராஜனை இன்னும் நான் காதலிக்கிறேன்!'
நடிகை நளினி நெகிழ்ச்சி: 'ராமராஜனை இன்னும் நான் காதலிக்கிறேன்!'

விவாகரத்து செய்த பின்பும் நடிகர் ராமராஜனை தான் இன்னும் காதலித்து வருவதாக நடிகை நளினி பேட்டியளித்துள்ளார்.

எண்பதுகளில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை நளினி ‘ராணுவ வீரன்’, ‘பிள்ளை நிலா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நளினிக்கும் நடிகர் ராமராஜனுக்கு கடந்த 1987-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவருக்குமிடையே மனவருத்தங்கள் ஏற்பட்டு, இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இருந்தாலும் தங்கள் குழந்தைகளுக்காக இருவரும் தற்போது வரையிலும் நல்லுறவில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், விவாகரத்து செய்து கொண்டாலும் இப்போது வரையிலும் தான் நடிகர் ராமராஜனை காதலித்து வருவதாக நடிகை நளினி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில், “ராமராஜன் நல்ல நடிகர். பாவம், அவர் என்னைத் தெரியாமல் காதலித்து, திருமணம் செய்து கொண்டு விட்டார். அவர் நல்ல மனிதர் தான். ஆனால், என்னவோ எங்களுக்குள் ஒத்துப் போகவில்லை. விவாகரத்து ஆனாலும், அவரை இன்னும் நான் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இது அவருக்கும் தெரியும்” என்று சொல்லி இருக்கிறார் நளினி. அவரின் மனம் திறந்த இந்தப் பேச்சானது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, திரைத் துறை வட்டாரத்திலும் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in