ஓடிடி தளங்கள் இயக்குநர்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன: நடிகை நதியா

ஓடிடி தளங்கள் இயக்குநர்களுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன: நடிகை நதியா
நதியா

ஓடிடி தளங்கள், இயக்குநர்களுக்கும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கும் அதிக முன்னுரிமை கொடுக்கின்றன என்று நடிகை நதியா தெரிவித்தார்.

'புத்தம் புது காலை' ஆந்தாலஜியின் முதல் பாகத்தைத் தொடர்ந்து 2-ம் பாகமாக, 'புத்தம் புது காலை விடியாதா' என்ற ஆந்தாலஜி படம் அமேசான் பிரைமில் நாளை வெளியாகிறது. துன்பங்களை எதிர்கொள்ளும் மனஉறுதி மற்றும் அதைக் கொண்டாடும் கதைகளுடன் வெளியாகும் இந்தப் படத்தில், காதல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கம் குறித்த பல்வேறு கதைகள் இடம்பெற்றுள்ளன.

நதியா - ஜோஜு ஜார்ஜ்
நதியா - ஜோஜு ஜார்ஜ்

இதில் மதுமிதா இயக்கியுள்ள 'மௌனமே பார்வையாய்' என்ற அத்தியாயத்தில் நடிகை நதியாவும் ஜோஜு ஜார்ஜும் நடித்துள்ளனர். இந்நிலையில் ஓடிடி தளங்கள் பற்றி நடிகை நதியா கூறியதாவது:

“நடிகர்களை விட இயக்குநர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுக்கு டிஜிட்டல் தளங்கள் முன்னுரிமை கொடுக்கின்றன. இதனால் அவர்கள் தங்களது கதைகளை நேர்த்தியாகச் சொல்ல இயலும். ஓடிடி உலக அளவிலான பார்வையாளர்களை வழங்குகிறது. நீங்கள் எந்த மொழியில் பார்க்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. நிச்சயமாக நீங்கள் உங்கள் தாய்மொழியில் படைப்புகளைப் பார்த்துக்கொண்டிருப்பது பெரியதொரு சவுகரியத்தை தருகிறது'' என்றார்.

Related Stories

No stories found.