என்றும் இளமை... 57வது பிறந்தநாளைத் தோழிகளுடன் கொண்டாடிய நடிகை நதியா!

தோழிகளுடன் நடிகை நதியா
தோழிகளுடன் நடிகை நதியா

நடிகை நதியா தன் தோழிகளுடன் தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்தப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நதியா. நதியா நடித்தப் படங்களில் அவர் பயன்படுத்திய உடைகள், ஹேர்ஸ்டைல், தோடு போன்றவை அப்போதே ‘நதியா ஃபேஷன்’ என டிரெண்ட் ஆனது. தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே திருமணம், குழந்தை என செட்டில் ஆனவர் கடந்த 2004ம் ஆண்டு ஜெயம் ரவியின் ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் கம்பேக் கொடுத்தார்.

தோழிகளுடன் நடிகை நதியா
தோழிகளுடன் நடிகை நதியா

அதன் பிறகு தமிழ், தெலுங்கு எனப் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நதியா. இந்த நிலையில் நதியா தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்தப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் தற்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’என்றும் இளமை’ என நதியாவின் அழகை கொண்டாடி வரும் ரசிகர்கள் அவருக்கு 57 வயது ஆகிவிட்டதை நம்பவே முடியவில்லை எனக் கூறி அவருக்குத் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உடற்பயிற்சி, யோகா, ஆரோக்கியமான உணவு என இதை ஸ்ட்ரிக்ட்டாகப் பின்பற்றி வருவதே தனது இளமை ரகசியம் எனச் சொல்லும் நதியா தமிழில் கடைசியாக கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் வெளியான ‘லெட்ஸ் கெட் மேரிட்’ படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in