ஜன்னலில் தூக்கில் தொங்கிய நிலையில் நடிகை சடலமாக மீட்பு: சந்தேகப் பார்வையில் கணவர்

ஜன்னலில் தூக்கில் தொங்கிய நிலையில் நடிகை சடலமாக மீட்பு: சந்தேகப் பார்வையில் கணவர்

பிரபல நடிகை மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து அவரது கணவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் காசர்கோடு செருவத்தூரைச் சேர்ந்தவர் ஷஹானா (20). இவர் நகைக்கடை விளம்பரங்களில் மாடலாக நடித்ததை அடுத்து கவனம் பெற்றார். மலையாளம், தமிழில் சில படங்களில் நடித்துள்ள இவர், கடந்த வருடம் சஜாத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு கோழிக்கோடு பரம்பில் பஜாரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை ஜன்னல் கிரில்லில் தூக்குமாட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுபற்றி போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

``சஹானா தற்கொலை செய்திருக்க மாட்டார். கணவர் மீது சந்தேகம் இருக்கிறது. அவர் அவளைக் கொடுமைப்படுத்தி இருக்கிறார். கணவரின் கொடுமைப் பற்றி அவ்வப்போது எங்களிடம் தெரிவித்திருக்கிறார்'' என்று சஹானாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீஸார், சஜாத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in