அது ஆபாச காட்சியா? நடிகை வேதனை!

மெஹ்ரீன் பிர்சாதா
மெஹ்ரீன் பிர்சாதா

தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா. இவர் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் நடித்தவர். ராஜா தி கிரேட், எஃப் 2, எஃப் 3 உள்ளிட்ட வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

கடந்த அக்டோபர் 13ம் தேதி இவரது நடிப்பில் 'சுல்தான் ஆஃப்' டெல்லி என்ற வெப் சீரிஸ் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த தொடரில் வன்கொடுமை காட்சியில் மெஹ்ரீன் நடித்திருந்தார். இந்த காட்சியை பலரும் ஆபாச காட்சி என்ற பொருள்படும் வகையில் விமர்சித்திருந்தனர்.

இதுகுறித்து, பதிவிட்டுள்ள மெஹ்ரீன் தனது முதல் வெப்சீரிஸ் தற்போது வெளியாகியுள்ளது. அது ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். சில நேரங்களில் கதைக்கு தேவைப்படும் காட்சிகளில் நடிப்பது ஒரு நடிகையாக முக்கியம் என கருதுவதாகவும், அதன் அடிப்படையிலேயே சுல்தான் ஆஃப் டெல்லி சீரிஸில் குடும்ப வன்கொடுமை காட்சியில் நடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், சிலர் அந்த காட்சியை ஆபாச காட்சியாக குறிப்பிட்டு விமர்சித்திருந்தது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், வன்கொடுமை காட்சியை இப்படி ஆபாசமாக பார்ப்பது பெண்களுக்கு எதிரான வன்முறையை ஆதரிப்பது போல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in