மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டது ஏன்?

மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டது ஏன்?
மீரா மிதுன்

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்திமாறி உட்பட சில படங்களில் சிறு வேடங்களில் நடித்திருப்பவர் மீரா மிதுன். மாடலான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.

மீரா மிதுன்
மீரா மிதுன்

இவர் கடந்த வருடம் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போலீஸில் புகார் அளித்தனர்.

மீரா மிதுன்
மீரா மிதுன்

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி அவரும் அவர் நண்பர் சாம் அபிஷேக் என்பவரும் கேரளாவில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டனர். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை கைது செய்து ஏப்ரல் 4-ம் தேதி ஆஜர்படுத்தவும் போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் மீரா மிதுன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.