நள்ளிரவில் நடிகை மீனா வீட்டில் கொண்டாட்டம்!!

மீனா
மீனா

நேற்று நடிகை மீனாவின் 47-வது பிறந்த நாளை சக நடிகைகள் அவர் வீட்டிற்கு சென்று உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், அஜித் என பலருடன் நடித்துள்ளார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர்தான் நடிகர் விஜய் உடன் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மீனாவில் கணவர் கடந்த வருடம் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கணவன் இறந்த பிறகு நடிகை மீனா வெளியில் வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் நேற்று மீனாவின் 47-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. திரையுலகினர் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்தனர்.

இந்நிலையில், அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிரபல நடிகைகளான சினேகா, அனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் இரவு 12 மணிக்கு வீட்டிற்கு சென்று கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அந்த வீடியோவானது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in