கோல்டன் விசா: துபாய் அரசுக்கு நன்றி தெரிவித்தார் மீனா

கோல்டன் விசா: துபாய் அரசுக்கு நன்றி தெரிவித்தார் மீனா

ஐக்கிய அரபு அமீரகம் நடிகை மீனாவுக்கும் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை நடிகர், நடிகைகள் உட்பட இந்திய பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். இந்தி நடிகர்கள் சஞ்சய்தத், ஷாருக்கான், இந்தி நடிகை ஊர்வசி ரவுதலா, துஷார் கபூர் உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

துபாய் எக்ஸ்போவில் மீனா
துபாய் எக்ஸ்போவில் மீனா

தென்னிந்திய சினிமாவில் மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், நடிகைகள் மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, நடிகர்கள் ஆர்.பார்த்திபன், சிம்பு உட்பட பலருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி இந்த விசாவை பெற்றிருந்தார்.

கோல்டன் விசா பெறுகிறார் மீனா
கோல்டன் விசா பெறுகிறார் மீனா

இந்நிலையில் நடிகை மீனாவுக்கும் இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாவை பெற்றுக்கொண்ட நடிகை மீனா, பின்னர் துபாயில் நடக்கும் எக்ஸ்போவில் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

’என் திரையுலக வாழ்க்கையில், அதிக ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற துபாயில் இருந்து இந்த விசா கிடைத்ததில் மகிழ்ச்சி. துபாய் எக்ஸ்போ 2020-ல் இந்த விசாவை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளேன். இந்த கவுரவத்தை தந்ததற்கு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி’ என்றார் மீனா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in