என் கணவருக்கு யாராவது அப்படி செய்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும்: நெகிழ வைத்த நடிகை மீனா

என் கணவருக்கு யாராவது அப்படி செய்திருந்தால் என் வாழ்க்கையே மாறி இருக்கும்: நெகிழ வைத்த நடிகை மீனா

பிரபல நடிகை மீனா, தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் வித்யாசாகர். பெங்களூருவைச் சேர்ந்த இவருக்கும் மீனாவுக்கும் 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு நைனிகா எனற மகள் இருக்கிறார். நுரையீரல் பிரச்சினைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர். கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். கணவர் இறப்பால் துக்கத்தில் இருந்த மீனா, இப்போது மீண்டு வருகிறார்.

இந்நிலையில், சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி, தனது உடல் உறுப்புகளை, நேற்று தானம் செய்துள்ள மீனா, நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

மகள் நைனிகாவுடன் நடிகை மீனா
மகள் நைனிகாவுடன் நடிகை மீனா

ஓர் உயிரை காப்பதை விட வேறு சிறந்தது எதுவும் கிடையாது. உயிரைக் காப்பாற்றும் உன்னதமான விஷயம், உடல் உறுப்பு தானம். நோயுடன் போராடும் பலருக்கு மறுவாழ்க்கை கொடுக்கும் வரம். அதை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்துள்ளேன். என் கணவர் சாகருக்கு யாராவது அப்படி செய்திருந்தால் என் வாழ்க்கை மாறி இருக்கும்.

ஓர் உடல் உறுப்பு தானத்தின் மூலம் 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும். அனைவரும் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது தானம் வழங்குபவருக்கும் பெறுபவருக்கும் மருத்துவர்களுக்கும் இடையில் நடக்கும் விஷயமல்ல. இது குடும்பம், உறவினர்கள், சக ஊழியர்கள் உட்பட அனைவரும் சம்பந்தப்பட்டது.

நான் என் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறுதிமொழி எடுத்து கொண்டேன். இதுவே நம் பரம்பரையை வாழ வைக்கும் சிறந்த வழியாக இருக்கும். இவ்வாறு நடிகை மீனா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நடிகை மீனாவின் இந்த முடிவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in