புதுசா ஒரு வெட்கம் முளைத்த மீனா!

நடிகை மீனா
நடிகை மீனா

நடிகை மீனா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் புதிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அடியெடுத்த நடிகை மீனா, 90களில் தமிழ் மட்டுமன்றி தென்னக மொழிகள் அனைத்திலும் சூப்பர் நாயகியாக வலம் வந்தார். ரஜினி, கமல் என சீனியர்களிடம் தொடங்கி விஜய், அஜித் என தனது தலைமுறை உச்ச நட்சத்திரங்கள் வரை ஒரு சுற்று வந்தார். திருமணமாகி மகள் நைனிகா பிறந்த பிறகும் அவரது சினிமா பங்களிப்பு தொடர்ந்தது.

கடந்தாண்டு மத்தியில் கணவரை இழந்ததில் சில காலம் பொதுவெளியை தவிர்த்திருந்தார் மீனா. இதனால் பழைய மீனாவை எப்போது பார்ப்போம் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கூடிய விரைவிலேயே மீனா இயல்புக்கு திரும்பினார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக பிரத்யேக படங்கள், வீடியோக்களை ரசிகர்களிடம் தொடர்ந்து பகிர ஆரம்பித்தார். மகள் நைனிகாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், தென்னக சினிமா நட்சத்திரங்களுடனான மலரும் நினைவு பதிவுகள், தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள், பொது நிகழ்வுகள் என தனது திரை வெற்றிடத்தை ரசிகர்களுக்காக இன்ஸ்டா வாயிலாக நிரப்பியே வந்தார். அவற்றின் தொடர்ச்சியாக இன்று ’எனிமி’ திரைப்படத்தின் ’தம் தம்’ பாடலுக்காக தோழியும் சக நடிகையுமான சங்கவியுடன் இணைந்து உற்சாக நடன வீடியோவை பகிர்ந்திருக்கிறார் மீனா.

இந்த வீடியோவில் மீண்டும் பழைய மீனாவை, அதே துடிப்பும், அழகும், அபிநயங்களுமாக கண்டுகொள்ள முடிந்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். வழக்கம்போல முதல் வரிசை வாழ்த்துகளை பகிர்ந்துகொள்ளும் ஸ்ரீதேவி விஜய்குமார், திவ்யா சத்யராஜ், ராதிகா சரத் குமார் ஆகியோருடன், இந்த பாடலுக்காக விஷாலுடன் திரையை பகிர்ந்துகொண்ட மிர்ணாளினி ரவி உள்ளிட்டோரும் உற்சாக வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in