என் குழந்தையை பற்றி யோசித்துப் பாருங்கள்... திருமண வதந்தி குறித்து கொந்தளித்த நடிகை மீனா!

நடிகை மீனா
நடிகை மீனா

"என்னைப் போன்றவர்களின் குழந்தைகளை யோசித்துப் பாருங்கள். எதிர்காலத்தில் நடப்பதைப் பற்றி இப்போதே கேட்டால் என்ன சொல்ல முடியும்?” எனத் தனது இரண்டாவது திருமணம் பற்றிய வதந்திக்கு நடிகை மீனா காட்டமாக பதிலளித்துள்ளார்.

மகள் நைனிகாவுடன் நடிகை மீனா
மகள் நைனிகாவுடன் நடிகை மீனா

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் எதிர்பாராத விதமாக கடந்த வருடம் இறந்து போனார். அவரது மறைவுக்குப் பிறகு நடிகை மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்தான செய்தி அடிக்கடி வெளியானது. ஆனால், அதெல்லாம் பொய், வெறும் வதந்தி என மீனா மறுத்தும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. மீண்டும் அவரது இரண்டாவது திருமணம் குறித்தான செய்தி உலா வரத் தொடங்கி இருக்கிறது.

இதனால் கோபமடைந்த மீனா, “நாட்டில் என்னைப்போல் தனிமையில் வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளைப் பற்றி கொஞ்சமாவது யோசித்துவிட்டு பின்பு இதுபோன்ற செய்திகளைப் பகிருங்கள். எனக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. எதிர்காலத்தில் நடப்பதைப் பற்றி இப்போதே எப்படி என்னால் பதில் சொல்ல முடியும்? தயவுசெய்து இதுபோன்று வரும் வதந்திகளைக் கண்டுக்காதீங்க” எனக் கூறியுள்ளார்.

மீனா
மீனா

மீனா தற்போது தமிழ், மலையாளம் என படங்களில் நடித்து வருவது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார். இந்த வாழ்க்கையே தனக்குப் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கிறது எனவும், தன் குழந்தையின் எதிர்காலமே தனக்கு முக்கியம் எனவும் கூறியுள்ளார் மீனா.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in