அனைவருக்கும் முன்னுதாரணம் அஜித் - நடிகை மஞ்சுவாரியர் நெகிழ்ச்சி!

 அஜித்துடன் - மஞ்சு வாரியர்
அஜித்துடன் - மஞ்சு வாரியர்அஜித் சாருக்கு நன்றி

‘என்னைப் போன்றவர்களுக்கு நடிகர் அஜித் தான் முன்னுதாரணம். அவருக்கு நன்றிகள் பல’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் நடிகை மஞ்சு வாரியர்

நடிகர் அஜித்துடன் ’துணிவு’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மஞ்சு வாரியர். படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அஜித்துடன் இணைந்து பைக் ரைடு செல்வதை வழக்கமாக கொண்டுருந்தார். இந்த நிலையில், மஞ்சுவாரியர் புதிதாக பிஎம் டபிள்யு பைக் வாங்கியுள்ளார். இதனை ட்விட்டரில் பதிவிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்.

அதில், ‘நடிகர் அஜித் அனைவருக்கும் சிறந்த முன்னுதாரணம், என்னைப் போன்ற பலருக்கு அவர் இன்ஸ்பிரேஷனாக இருப்பதற்கு நன்றி. தைரியத்திற்கான ஒரு படி எப்போதும் சிறந்தது. நல்ல ரைடர் ஆவதற்குக் கற்றுக்கொண்டு இருக்கிறேன். சாலையில் செல்லும்போது தடுமாறினால் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் மஞ்சு.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in