’துணிவு’ படத்திற்காக டப்பிங் தொடங்கிய மஞ்சு வாரியர்!

’துணிவு’ படத்திற்காக டப்பிங் தொடங்கிய மஞ்சு வாரியர்!

’துணிவு’ படத்திற்காக நடிகை மஞ்சு வாரியர் டப்பிங் தொடங்கியுள்ளார்.

’நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி தற்போது ‘துணிவு’ படத்திற்காக மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஆக்‌ஷன் காட்சிகளோடு சேர்ந்து குடும்ப சென்டிமென்ட்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து ‘துணிவு’ படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் இன்னொரு பக்கம் தீவிரமாகத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் தற்போது ‘துணிவு’ படத்திற்காக நடிகை மஞ்சு வாரியர் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார். இந்தப் புகைப்படத்தை ‘நோ கட்ஸ். நோ க்ளோரி’ என்ற கேப்ஷனுடன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார் மஞ்சு. ‘துணிவு’ படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார் உலகம் முழுவதும் பைக் ட்ரிப்பிற்குத் திட்டமிட்டுள்ளதால் சிறிது காலத்திற்கு அடுத்த படம் குறித்தான திட்டத்தைத் தள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in