`துணிவு’ பாடலுக்கு கலாய்த்த ரசிகர்கள்: நடிகை மஞ்சுவாரியர் அளித்த பாசிட்டிவ் பதில்

`துணிவு’ பாடலுக்கு கலாய்த்த ரசிகர்கள்: நடிகை மஞ்சுவாரியர் அளித்த பாசிட்டிவ் பதில்

நடிகை மஞ்சுவாரியர் ரசிகர்களின் கேலிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கக்கூடிய ’துணிவு’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. ஜிப்ரான் இசையில் ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் அதே சமயம், நேற்று ’காசேதான் கடவுளடா’ என இரண்டாம் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. ஏற்கெனவே, இந்தப் படத்தில் தான் பாடல் பாடியிருப்பதாக மஞ்சு வாரியர் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் பாடலில் அவரது குரல் இடம்பெறவில்லை என ரசிகர்கள் இணையத்தில் கேலி செய்திருந்தனர். இதற்கு மஞ்சுவாரியர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, ‘’துணிவு’ படத்தில் இருந்து ‘காசேதான் கடவுளா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. என் குரல் கேட்கவில்லை என்று யாரெல்லாம் வருத்தப்படுகிறீர்களோ, கவலைப் படாதீர்கள்! இதே பாடல், வீடியோவாக பார்க்கும்போது நிச்சயம் என் குரல் இருக்கும். உங்களுடைய அக்கறைக்கு நன்றி. உங்கள் கேலிகள் அனைத்தையும் நான் பாசிட்டிவாகவே எதிர்கொள்கிறேன். உங்களுக்கு அன்பு’ என்று பதிவிட்டிருக்கிறார் மஞ்சுவாரியர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in