நடிகை மஞ்சு வாரியரை பாராட்டும் மத்திய அரசு: என்ன காரணம்?

நடிகை மஞ்சு வாரியரை பாராட்டும் மத்திய அரசு: என்ன காரணம்?

நடிகை மஞ்சு வாரியருக்கு மத்திய நிதி அமைச்சகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், நேர்மையாக வரி செலுத்தும் பிரபலங்களை பாராட்டி சான்றிதழ் அளித்து வருகிறது. அதன்படி ஆசிர்வாத் சினிமாஸ் மூலம் படங்கள் தயாரித்து வரும் அந்தோணி பெரும்பாவூருக்கு இந்த சான்றிதழ் சில நாட்களுக்கு முன் வழங்கப்பட்டது. இந்நிறுவனம் சுமார் 32 படங்களைத் தயாரித்துள்ளது. மோகன்லால் நடிப்பில் 'த்ரிஷ்யம்', 'லூசிஃபர்', 'மரைக்காயர்' உட்பட பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்துள்ளது.

இந்நிலையில், பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கும் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது. கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான வரியை முறையாகக் கட்டியதால் இந்த சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த சான்றிதழ் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் உட்பட சிலருக்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

நடிகை மஞ்சு வாரியர் தமிழில், ஹெச். வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in