
விக்ரமின் அடுத்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனாவுக்கு பதில் மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார்.
’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்கு அடுத்து நடிகர் விக்ரம் தனது 61-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் இந்தப் படத்தை இயக்குகிறார். இயக்குநர் ரஞ்சித் மற்றும் விக்ரம் இணைவது இதுவே முதல் முறை. கோலார் தங்கவயலை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் கதை இது என்பதை இயக்குநர் ரஞ்சித் குறிப்பிட்டிருந்தார்.
ஆந்திராவில் கடப்பாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. நீலம் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தக் கதையில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருந்த படங்களால் இந்தப் படத்தில் ராஷ்மிகாவால் நடிக்க முடியாமல் போக, இப்போது மாளவிகா மோகனன் உள்ளே வந்திருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 2டி, 3டியில் உருவாக்கப்பட்டு பான் இந்தியா படமாக ’சியான் 61’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. சுதந்திர காலக்கட்டத்திற்கு முன்பு நிகழும் இந்தக் கதை அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குப் பிறகு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.