`தங்கலான்’ படத்தில் இருந்து நீக்கப்படுகிறார் மாளவிகா மோகனன்?

`தங்கலான்’ படத்தில் இருந்து நீக்கப்படுகிறார் மாளவிகா மோகனன்?

நடிகை மாளவிகா மோகனன் ‘தங்கலான்’ படத்தில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘தங்கலான்’. கோலார் தங்கவயல் மற்றும் அங்குள்ள உழைப்பாளிகளின் கதையை மையமாகக் கொண்ட திரைப்படம் இது. கர்நாடகா மற்றும் மதுரை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகை பார்வதி நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ரஞ்சித்துடன் எடுத்தப் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர அது வைரலானது.

இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனன் படத்தில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கதைப்படி மாளவிகாவின் கதாபாத்திரம் கனமானது எனவும் அதை உள்வாங்கி நடிக்க அவர் சிரமப்படுவதாகவும் இதனால் அதிக டேக் போகிறது என்ற காரணத்தாலேயே, மாளவிகாவை மாற்றுவது பற்றித் தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in