`என் புகழுக்கு கிருஷ்ணபிரசாத் கலங்கம் ஏற்படுத்துகிறார்'- சென்னை காவல் ஆணையரிடம் நடிகை மதுவந்தி புகார்

`என் புகழுக்கு கிருஷ்ணபிரசாத் கலங்கம் ஏற்படுத்துகிறார்'- சென்னை காவல் ஆணையரிடம்  நடிகை மதுவந்தி புகார்

தன் மீது பொய்யான மோசடி புகார் அளித்த கோயில் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்ககோரி பள்ளி நிர்வாகியும், நடிகையுமான மதுவந்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கோயில் நிர்வாகி கிருஷ்ணபிரசாத் நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், மதுவந்தி பத்ம சேஷாத்ரி பள்ளியில் சீட்டு வாங்கி தருவதாக கூறி, பெற்றோர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி இன்று ஆன்லைன் மூலமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "மாம்பலத்தை சேர்ந்த கிருஷ்ணபிரசாத் தனது கலை குழுவில் இடம் பெற்றிருந்தார். அப்போது சமுதாயத்தில் பிந்தங்கிய இரு குழந்தைகளுக்கு பத்ம சேஷாத்ரி பள்ளியில் சீட்டு வாங்கி தருமாறு தன்னிடம் கேட்டார். அதனால் கருணை அடிப்படையில் பள்ளியில் சீட் வாங்கி கொடுத்தேன். பின்னர் கிருஷ்ணபிரசாத் தனது பெயரை பயன்படுத்தி பெற்றோர்கள் பலரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது பின்னர் தெரியவந்தது.

இதுவரை கிருஷ்ணபிரசாத்திடம் ஒரு ரூபாய் கூட நான் வாங்கவில்லை. போலியான ஆவணங்களை தயாரித்து கிருஷ்ணபிரசாத் தன் மீது வீண்பழி போடுகிறார். எனவே தன் பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் என் மீது பொய்யான புகார் அளித்த கிருஷ்ணபிரசாத் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in