பாலிவுட் பரபரப்பு... அரசியலில் குதிக்கும் மாதுரி தீக்‌ஷித்?

மாதுரி தீக்‌ஷித்
மாதுரி தீக்‌ஷித்

பாலிவுட் நடிகை, நடனக்கலைஞரான மாதுரி தீக்‌ஷித் அரசியலில் குதிக்க இருப்பதாகவும் அவர் போட்டியிடும் தொகுதி குறித்தும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மாதுரி தீக்‌ஷித்
மாதுரி தீக்‌ஷித்

நடிகர்களும் நடிகைகளும் சினிமா டூ அரசியல் என்ற விஷயத்தை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித் அரசியல் களத்தில் நுழைய இருப்பதாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வந்தது. குறிப்பாக, வருகிற லோக் சபா தேர்தலில் மும்பையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அவர் போடியிடப் போவதாகவும் சொல்லப்பட்டது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இந்தியா vs நியூசிலாந்து அரையிறுதிப் போட்டியில் மாதுரியும் அவரது கணவர் ஸ்ரீராம் நேனேயும் மாநில பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலருடன் கலந்துகொண்டனர். இந்த விஷயமும் மாதுரியின் அரசியல் வருகையை உறுதி செய்யும் விதமாக இருந்தது.

மாதுரி தீக்‌ஷித்
மாதுரி தீக்‌ஷித்

அரசியலில் மாதுரி நுழைய இருப்பது குறித்து அவர் பெயர் அடிபடுவது இது முதல் முறையல்ல. கடந்த லோக்சபா தேர்தலிலும் அவர் பெயர் அடிபட்டது. இது குறித்து மாதுரி தனது சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “நான் அரசியலில் நுழைய இருக்கிறேன் எனத் தகவல் வந்து கொண்டிருப்பது குறித்து நான் அறிவேன். ஆனால், அவை எல்லாம் வெறும் வதந்திதான். நான் எந்தக் கட்சியிலும் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை” எனக் கூறியுள்ளார் மாதுரி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in