காணாமல் போன பிரபல நடிகை சடலமாக மீட்பு

காணாமல் போன பிரபல நடிகை சடலமாக மீட்பு
லிண்ட்சே பேர்ல்மன்

காணாமல் போன பிரபல ஹாலிவுட் நடிகை, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை லிண்ட்சே பேர்ல்மன் (Lindsey Pearlman). இவர், அமெரிக்காவில் அதிக (14 ஆயிரம்) எபிசோட்கள் ஒளிபரப்பப்பட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ’ஜெனரல் ஹாஸ்பிடல்’ என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தொடர்ந்து ’சிகாகோ ஜஸ்டிஸ்’ உட்பட சில தொடர்களில் நடித்துள்ளார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

லிண்ட்சே பேர்ல்மன்
லிண்ட்சே பேர்ல்மன்

லாஸ் ஏஞ்சல்ஸில் குடும்பத்துடன் வசித்து வந்த 43 வயதான லிண்ட்சே, கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென காணாமல் போனார். அவர் எங்கு போனார் என்பது பற்றி தெரியவில்லை. அவர் ஃபோன் சுவிட்ச்டு ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

லிண்ட்சே பேர்ல்மன்
லிண்ட்சே பேர்ல்மன்

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, ஹாலிவுட் பகுதியில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள அவர் கணவர் வான்ஸ் ஸ்மித், ’லிண்ட்சே மறைந்துவிட்டார். இதைக் கேள்விபட்டு நொறுங்கி இருக்கிறேன். அதுபற்றி பின்னர் விரிவாக பகிர்ந்துகொள்கிறேன். இப்போது எங்கள் குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.