”நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் எங்களுக்கு உடை மாற்றக் கூட சரியான இடவசதி ஏற்பாடு செய்து தர மாட்டார்கள். பொதுவெளியில் கூட சில சமயம் உடை மாற்றி இருக்கிறோம். அப்போது மணிவண்ணன் சார்தான் தக்க சமயத்தில் உதவினார்” என நடிகை லாவண்யா கூறியுள்ளார்.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லாவண்யா. சின்னத்திரையில் மட்டுமல்லாது ‘படையப்பா’, ’சங்கமம்’, ‘வில்லன்’ எனப் பல படங்களிலும் நடித்துள்ளார். 44 வயதாகும் இவருக்கு சமீபத்தில் திருமணமும் முடிந்தது. சினிமாத் துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் தங்களுக்கு உடை மாற்றகூட சரியான இடம் இல்லாம கஷ்டப்பட்டக் கதையை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அவர் பேசியிருப்பதாவது, “சினிமாவில் நான் நடித்த ஆரம்ப காலத்தில் உடை மாற்றுவதற்குக் கூட சரியான வசதி இருக்காது. படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருக்கும் எதாவது வீடு போன்ற இடத்தைக் காட்டுவார்கள். ஆனால், அதுவும் பாதுகாப்பாக இருக்காது.
சரியான இடம் இல்லாமல் சிரமமாக இருக்கும். ’ஏன் இப்படி நடித்துக் கஷ்டப்படுகிறோம்? மாதச்சம்பளம் வரும் வேலைக்குப் போய் இருக்கலாமே?’ எனத் தோன்றிக் கொண்டே இருக்கும். ஆனால், அப்போதிருந்த குடும்ப சூழலுக்காக சகித்துக் கொள்ள வேண்டி இருந்தது” என்றார்.
மேலும், “ஒரு நாள் நாங்கள் படும் துன்பத்தைப் பார்த்த மணிவண்ணன் சார் அவருக்கான கேரவனை எங்களிடம் கொடுத்து விட்டார். நீங்கள் உபயோகித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அப்போது எங்களுக்கு அது பெரிய விஷயம். அவர் ஆரம்ப காலத்தில் எங்களைப் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு செய்த இந்த உதவியை மறக்க மாட்டேன்” என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!
கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!
நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!
திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!
சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!