பேட்டியில் குறுக்க மறுக்க நடந்த நபர்... அடித்து துவைத்த பிரபல நடிகை!

நடிகை லக்‌ஷ்மி மஞ்சு...
நடிகை லக்‌ஷ்மி மஞ்சு...

பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் போது குறுக்கே நடந்து கொண்டிருந்த நபர்களால் நடிகை லக்‌ஷ்மி மஞ்சு எரிச்சலடைந்துள்ளார்.

சமீபத்தில் துபாயில் சைமா விருதுகள் 2023 நடைபெற்றது. இதில் பல இந்திய திரைப்பிரபலங்கள் திரளாக கலந்து கொண்டனர். தெலுங்கு நடிகை லக்‌ஷ்மி மஞ்சுவும் இந்த விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது ரெட் கார்பெட் ஏரியாவில் அவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த போது அதை தொந்தரவு செய்யும் விதமாக சில நபர்கள் கேமராவின் முன் நடந்து கொண்டிருந்தார்கள். இதனால் எரிச்சலடைந்து கோபமுற்ற லக்‌ஷ்மி மஞ்சு முதலில் சென்ற நபரை அவரது தோள்பட்டையில் அடித்துள்ளார்.

இதற்கு பின்னும் வேறொரு நபர் அடுத்து வந்து அவரது பேட்டியினை நிறுத்த முயல, ‘கேமராவுக்கு பின்னால் செல்லுங்கள்’ என கோபத்தில் கத்தியுள்ளார் லக்‌ஷ்மி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நடிகர் மோகன் பாபுவின் மகளான லக்‌ஷ்மி கடந்த 2011ம் ஆண்டு தெலுங்கில் 'அனகனக ஓ தீருது’ படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‘லக்‌ஷ்மி பாம்’, ‘மான்ஸ்டர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in