16 வருடத்துக்குப் பிறகு மீண்டும் லைலா!

நடிகை லைலா
நடிகை லைலா

தமிழில், 'கள்ளழகர்', 'முதல்வன்', 'தில்', 'மவுனம் பேசியதே', 'உன்னை நினைத்து', 'பிதாமகன்', 'பரமசிவன்' உட்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் லைலா. தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்து வந்தார். கடைசியாக 'திருப்பதி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.

பிறகு மெஹ்தின் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டார். மெஹ்தின் - லைலா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

நடிகை லைலா
நடிகை லைலா

இந்நிலையில் 16 வருடத்துக்குப் பிறகு லைலா மீண்டும் திரையுலகுக்குத் திரும்பியிருக்கிறார். கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் முக்கிய வேடத்தில் அவர் நடிக்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் படமாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்கின்றனர். சங்கி பாண்டே, முரளி சர்மா, முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in