கடைசியில் என்னையும் பிடித்துவிட்டது கரோனா!

-குஷ்பு ட்வீட்
கடைசியில் என்னையும் பிடித்துவிட்டது கரோனா!
குஷ்பு

நடிகை குஷ்புவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதை அடுத்து அவர், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. 3-வது அலையான இந்த தொற்றில், சினிமா பிரபலங்கள் பலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடிகைகள் ஷோபனா, மீனா, த்ரிஷா, லட்சுமி மன்சு, ஷெரின், நடிகர்கள் அருண் விஜய், மகேஷ் பாபு, சத்யராஜ், இயக்குநர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் உட்பட பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நடிகையும் பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஷ்பு
குஷ்பு

இதை ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

’‘கடந்த 2 அலைகளில் தப்பித்து வந்த என்னை, 3-வது அலையில் பிடித்து விட்டது கரோனா. நேற்று மாலை தொற்று இல்லாத நிலையில், இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூக்கில் இருந்து நீர் வந்துகொண்டே இருந்ததால், மீண்டும் ஒருமுறை சோதனை செய்ததில் கரோனா உறுதியானது. தனியாக இருப்பதை வெறுக்கிறேன். எனவே, ட்விட்டரில் தொடர்ந்து 5 நாட்களுக்கு பொழுதைப் போக்க உதவுங்கள். உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் கரோனா சோதனை மேற்கொள்ளுங்கள்’’ என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in