அடினோ வைரஸில் இருந்து நலம் பெற்ற நடிகை குஷ்பு: முக்கிய ட்விட் வெளியீடு

நடிகை குஷ்பு
நடிகை குஷ்புஅடினோ வைரஸில் இருந்து நலம் பெற்ற நடிகை குஷ்பு: முக்கிய ட்விட் வெளியீடு

அடினோ வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகை குஷ்பு, உடல்நிலை தேறியதையடுத்து வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து அவர் முக்கியமான ட்விட்டைப் பதிவிட்டுள்ளார்.

நடிகையும், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமாக இருப்பவர் குஷ்பு. இவர் அண்மையில் அடினோ வைரஸ் என்னும் தொற்றால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில்," எனக்கு காய்ச்சல், தொண்டை வலி, சோம்பல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். ரசிகர்கள் யாரும் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். காய்ச்சல் வந்தால் யாரும் அலட்சியப்படுத்த வேண்டாம்" என பதிவிட்டிருந்தார். இந்த தகவலால் திரையுலகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு, உடல்நிலை தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் ஒரு செய்தியைப் பதிவிட்டுள்ளார். அதில்," மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டேன். சிறிது நாட்களுக்கு பயணங்களைத் தவிர்க்க வேண்டும். என் உடல்நலம் குறித்த உங்கள் அன்பிற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in