அட இது குஷ்புவா?: இணையத்தில் வைரலாகும் இளமை கொஞ்சும் புகைப்படங்கள்

அட இது குஷ்புவா?: இணையத்தில் வைரலாகும் இளமை கொஞ்சும் புகைப்படங்கள்

லண்டன் சென்றுள்ள நடிகை குஷ்பு அங்கு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இளமை துள்ளும் பழைய தோற்றத்தில் உள்ள அவரது புகைப்படம் இணையங்களில் தற்போத வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக இருந்த குஷ்பு, தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். அத்துடன் தேசிய கட்சியான பாஜகவில் உள்ளார். அவ்வப்போது அவர் இணையதளங்களில் புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். பில்கிஸ் பானு வழக்கில் பாஜகவிற்கு எதிராக அவர் தெரிவித்த கருத்து அக்கட்சியினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் குஷ்பு தற்போது லண்டன் சென்றுள்ளார். அவர் அங்கு எடுத்த அவரது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 51வயதாகும் குஷ்பு பழைய தோற்றத்தில் இளமை துள்ளும் வகையில் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஷ்பு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in