நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி: புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி: புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் உள்பட முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை குஷ்பு. இயக்குநர் சுந்தர் சி.யை காலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குஷ்பு தற்போது பாஜகவில் உள்ளார். நடிப்பில் இருந்து ஒதுங்கிய குஷ்பு, தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் குஷ்பு, வெளிநாட்டில் பயணம் செய்த புகைப்படங்களை சில நாட்களுக்கு முன் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் அவர் உடல்நிலை தற்போது திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் குஷ்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார். அதில், முதுகு தண்டுவடப் பகுதிக்கு கீழ் மிகவும் வலி ஏற்பட்டதாகவும், இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், எனவே இரண்டு நாட்களுக்கு பின்னர் மீண்டும் தன்னுடைய வழக்கமான பணிகளை மேற்கொள்வேன் என தெரிவித்து,ள்ள குஷ்பு விஜயதசமி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

குஷ்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் புகைப்படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விரைவில் அவர் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in