நடிகை குஷ்பு திடீரென உடல் எடையை குறைக்க என்ன காரணம்?- வெளிவந்த புதுத் தகவல்

நடிகை குஷ்பு திடீரென உடல் எடையை குறைக்க என்ன காரணம்?- வெளிவந்த புதுத் தகவல்

நடிகை குஷ்பு உடல் இளைத்ததற்கானக் காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் எண்பதுகளின் பிற்பகுதியில் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தற்போது சினிமாக்களில் அதிக அளவில் நடிப்பதை குறைத்துவிட்டு சினிமா, சீரியல் தயாரிப்பு, அரசியல், குடும்பம் என பிஸியாக வலம் வருகிறார். இதுமட்டுமல்லாது, சமீபத்தில் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்தார் குஷ்பு. உடல் எடை குறைத்த பின்பு தினமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி, முன்பைவிட குறைவாக சாப்பிடுவது, உடற்பயிற்சி, நல்ல தூக்கம், மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது என இவையே தன்னுடைய உடல் எடை இவ்வளவு சீக்கிரம் குறைய காரணமாக சொல்லி இருந்தார் குஷ்பு. இந்த நிலையில், அவர் உடல் எடை குறைக்க என்ன காரணம் என்பது தெரிய வந்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் மோகன் ‘ஹரா’ படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளார். இதில் நடிகர் மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார் குஷ்பு. நடிகர் மோகன் தற்போது தன்னுடைய கம்பேக்கிற்காக உடலை ஃபிட்டாக வைத்திருக்க அவருக்கு ஜோடி எனும் போது உடல் எடை குறைத்தால் நன்றாக இருக்குமே எனக் கருதிய படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ, குஷ்புவிடம் கோரிக்கை வைத்துள்ளார். குஷ்பு இதனை உடனே ஏற்று இவ்வளவு சீக்கிரத்தில் உடல் எடைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in