
நடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகை குஷ்பு, இப்போது அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். பாஜகவில் இருக்கும் அவர், கடைசியாக ரஜினிகாந்துடன் இணைந்து ’அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்பு, தன்னுடைய மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களை அடிக்கடிப் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்நிலையில் அவருடைய இன்ஸ்டாவை இன்று பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், அவர் உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் வேகமாகக் குணமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
ஆனால், அவருக்கு என்ன பிரச்சினை என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இதையடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளனர்.