திருமணத்திற்குத் தயாராகும் கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷிற்குத் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் தீவிரமாகி வருகின்றனர் என்றத் தகவல் வெளியாகியுள்ளது.

‘இது என்ன மாயம்’ படம் மூலமாகத் தமிழில் நடிகையாக அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். ’ரெமோ’, ‘பைரவா’, ‘அண்ணாத்தே’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருந்தார். அவர் நடித்திருந்த ’மகாநடி’ திரைப்படம் மூலம் நடிப்பிற்காக தேசிய விருது உள்ளிட்டப் பல விருதுகளை வென்றிருந்தார். கடைசியாக அவரது நடிப்பில் தமிழில் ‘சாணிக்காயிதம்’ படம் வெளியானது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்து வருகிறார்.

இதுதவிர, ’தசரா’, ‘போலா ஷங்கர்’, ‘மாமன்னன்’, ‘சைரன்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தியின் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விருப்பப்படுவதாகவும் இதனால், கீர்த்தி தற்போது படங்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டு தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் முதல் படியாகவே, தற்போது மூன்று படங்களைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in