'மாமன்னன்' படத்தில் நான் நன்றாக நடிக்கக் காரணம் இவர்தான்!... மனம் திறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்

’மாமன்னன்’ விழா மேடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.
’மாமன்னன்’ விழா மேடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.

'மாமன்னன்' படம் வெளியாகி 50 நாட்களாகியுள்ளது. இந்த விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ், கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு மற்றும் படத்தில் பணியாற்றியவர்கள் கலந்துகொண்டனர். மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், உதயநிதிஸ்டாலின் பறக்கும் பன்றிக்குட்டியுடன் உள்ளது போன்ற சிறிய சிலை பரிசாக வழங்கப்பட்டது.

’மாமன்னன்’ விழாவில் நினைவுப்பரிசு.
’மாமன்னன்’ விழாவில் நினைவுப்பரிசு.

இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், " மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் இருப்பதுதான் நான் நன்றாக நடிக்க காரணமாகும். முன்பெல்லாம் ஒரு படம் 100 நாள் ஓடுவது பெரிதாக இருந்தது. தற்போது 50 நாள் ஒருபடம் ஓடுவதே மிகப்பெரிய விஷயமாகி விட்டது. இப்படத்தில் வடிவேலு மலையில் நின்று அழுவது தான் எனக்கு மிகவும் பிடித்த காட்சி. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in