பிரபல நடிகருடன் ஜாலியாக ‘ஆட்டோ ரைடு’ சென்ற கீர்த்தி சுரேஷ்... வைரல் வீடியோ!

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகருடன் ஆட்டோ ரைடு சென்றுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக தமிழில் ‘மாமன்னன்’ படம் வெளியானது. தற்போது ’ரிவால்வர் ரீட்டா’, ‘ரகு தத்தா’ எனப் பல படங்களில் அவர் வரிசையாக ஹீரோயின் செண்ட்ரிக் படங்களில் பிஸியாக இருக்கிறார். இதற்கிடையில் அவ்வப்போது விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார் கீர்த்தி. அந்த வகையில், தற்போது பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் ஆட்டோ ரைட் சென்றுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று இரவு மும்பையில் இருவரும் இந்த ஆட்டோ ரைடுக்கு சென்றுள்ளனர். வருண் தவானின் ‘விடி18’ படப்பிடிப்பு முடிந்ததும் இருவரும் ஆட்டோ ரைடு சென்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. 'தெறி’ படத்தின் இந்தி ரீமேக் இது என சொல்லப்படும் நிலையில், நேற்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்தப் படத்தினை முராத் கெட்டனியுடன் இணைந்து இயக்குநர் அட்லி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிற நடிகர்கள், தொழில்நுட்பக் குழு குறித்தான விவரங்கள் மற்றும் பிற விஷயங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in