`படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்'- `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலிருந்து விலகுகிறாரா காவ்யா?

`படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்'- `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலிருந்து விலகுகிறாரா காவ்யா?

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வரும் காவ்யா விலக இருக்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரக்கூடிய காவ்யா அந்த தொடரில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் 1000-வது எபிசோடை பூர்த்தி செய்தது. இதனை ஒட்டி சீரியல் டீமில் அனைவரும் அதை கொண்டாடினார்கள்.

ஏற்கெனவே, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ராவின் எதிர்பாராத மரணம் காரணமாக, அந்தக் கதாபாத்திரத்தில் காவ்யா நடிக்க வந்தார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் பிறகு முல்லை கதாபாத்திரத்தில் அவருக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கினார். இப்போது காவ்யாவும் விரைவில் விலக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து காவ்யாவிடம் கேட்ட போது, ‘அது குறித்து இப்போதைக்கு என்னால் உறுதியாக எதுவும் கூற முடியாது. ஆனால், படங்களில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன் என்பது உண்மைதான். ஏற்கெனவே, நான் நடித்த சில படங்கள் வெளியாக காத்திருக்கிறது’ என்கிறார் காவ்யா.

விஜே சித்ராவுக்கு பதிலாக காவ்யா இப்போது காவ்யாவுக்கு பதில் யார் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in