போதையில் போலீஸ் மீது தாக்குதல்!- நடிகை சிறையில் அடைப்பு
நடிகை காவ்யா தாப்பர்

போதையில் போலீஸ் மீது தாக்குதல்!- நடிகை சிறையில் அடைப்பு

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, போலீஸாரை தாக்கிய நடிகை சிறையில் அடைக்கப்பட்டார்.

மும்பையை சேர்ந்தவர், நடிகை காவ்யா தாப்பர். இவர் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆரவ் நடித்த ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் நேற்று அதிகாலை மும்பை ஜூஹுவில் உள்ள ஜே.டபிள்யூ.மா ரியாட் நட்சத்திர ஓட்டல் அருகே தனது ஆண் நண்பருடன் காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவர் கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதியினர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நிர்பயா போலீஸார் விரைந்து சென்று நடிகை காவ்யா தாப்பரிடம் விசாரித்தனர்.

காவ்யா தாப்பர்
காவ்யா தாப்பர்

அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. விசாரித்த போலீஸாரிடம் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார். ஒரு பெண் போலீஸை தாக்கினார். இதில் அவர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தியது, பணியில் இருந்த போலீஸாரை கடமையை செய்ய விடாமல் தடுத்து, தாக்கியது என்பது உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பைகுல்லா சிறையில் அவரை அடைத்தனர்.

Related Stories

No stories found.