ரூ. 90 கோடி சொத்து மதிப்பு, 8 கிரிமினல் வழக்குகள்... நடிகை கங்கனாவின் அசரடிக்கும் ஸ்டேட்டஸ்!

கங்கனா
கங்கனா

தன்னிடம் ரூ. 90 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக நடிகை கங்கனா வேட்புமனு தாக்கலின்போது குறிப்பிட்டுள்ளார்.

இமாச்சலில் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை கங்கனா போட்டியிடுகிறார். இங்குள்ள 4 மக்களவைத் தொகுதிகள் மற்றும் அம்மாநிலத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக நேற்று நடிகை கங்கனா வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கங்கனா
கங்கனா

கங்கனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது வரை அவரது செயல்பாடுகளும் பேச்சுகளும் இணையத்தில் பேசுபொருளானது. அதுபோலவே, இப்போது வேட்புமனு தாக்கலின்போது கங்கனாவின் சொத்து மதிப்புகளும் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

12ம் வகுப்பு முடித்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும் கங்கனா, தன்னிடம் மொத்தம் ரூ. 90 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில், ரூ. 28 கோடி அசையும் சொத்து மற்றும் ரூ.62 கோடி அசையா சொத்து என்பது குறிப்பிடத்தக்கது. தனது கையிருப்பில் ரூ. 2 லட்சம் ரொக்கமும், வங்கிக் கணக்கில் 1 கோடியே 35 லட்சம் ரூபாயும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

மணாலி, மும்பை, பஞ்சாப்பில் சொத்துகள் இருப்பதாகவும் சொல்லி இருப்பவர் ரூ. 3.91 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ, பென்ஸ், மெர்சிடிஸ் மேபேஜ் ஆகிய சொகுசு கார்கள் இருப்பதையும் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் 6.5 கிலோ தங்கமும், 60 கிலோ வெள்ளியும், 3 கோடி மதிப்புள்ள 14 கேரட் வைர நகைகள் இருப்பதாகவும் கணக்கு காட்டியிருக்கிறார்.

மேலும் தனது பெயரில் 50 எல்ஐசி பாலிசிகள் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக 3 வழக்குகள் உட்பட 8 கிரிமினல் வழக்குகள் தன் மீது இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார் கங்கனா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in