'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத்?

'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத்?

‘சந்திரமுகி 2’ படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த 2005-ல் வெளியானத் திரைப்படம் ‘சந்திரமுகி’. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் வெற்றிப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்குநர் பி.வாசு இயக்க இருப்பதாக அறிவித்தார்.

இதில் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மைசூரு, கர்நாடகா எனப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இதன் இரண்டாம் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் அதாவது, ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

லட்சுமி மேனன் உள்ளிட்ட பல நடிகைகளது பெயர்கள் அடிபட்டது. இந்த நிலையில், அந்த கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க இருக்கிறார். கங்கனாவுக்கான படப்பிடிப்பு வருகிற டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பாளரான நீதா லுல்லா தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்தப் படத்தில் கங்கனாவின் ஆடை, தோற்றம் என அனைத்தும் அவருக்கு சவாலான புதிய விஷயமாக அமைந்திருக்கிறது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். ’சந்திரமுகி 2’ படத்தில் கங்கனா நடிப்பது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in