
நடிகை கங்கனா ரவத் சமீபத்தில் டெல்லியில் இஸ்ரேல் தூதர் நவர் கிலோனை சந்தித்துள்ளார்.
நடிகை கங்கனா ரணாவத் டெல்லியில் இஸ்ரேல் தூதர் நவர் கிலோனை சந்தித்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நிலவும் நெருக்கடி குறித்து பேசியுள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவை விரிவுபடுத்தும் வகையில் பல கருத்துக்களை கங்கனா பகிர்ந்து கொண்டார். மேலும், ஹமாஸை தற்போதைய காலத்தின் 'ராவணன்' என்று அழைத்தார். இந்த சந்திப்பு குறித்தானப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா பகிர்ந்திருப்பதாவது, 'என் இதயம் இஸ்ரேலுக்கு செல்கிறது. இந்தியாவுக்கான இஸ்ரேலின் தூதருடன் எனது உரையாடல் இங்கே உள்ளது.
நான் இஸ்ரேலுக்கும் யூதர்களுக்கும் எனது ஆதரவைப் பற்றி தெரிவித்தேன். பயங்கரவாதிகளால் படுகொலைகள் தொடங்குவதற்கு முன்பு, நான் குரல் கொடுத்தேன். ஒரு இந்து தேசமாக, பல நூற்றாண்டுகளாக தொடரும் இந்து இனப்படுகொலைகள், யூதர்களை நாங்கள் அதிகம் அடையாளம் காண்கிறோம். இந்துக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பாரதத்திற்கு நாங்கள் தகுதியானவர்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். யூதர்களும் ஒரு தேசத்திற்கு தகுதியானவர்கள்தான். எனக் கூறியுள்ளார்.
மேலும், 'இன்று முழு உலகமும், குறிப்பாக இஸ்ரேலும் இந்தியாவும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று நான் ராவண வதத்திற்காக டெல்லி சென்றபோது, இஸ்ரேல் தூதரகத்திற்கு வந்து இன்றைய நவீன ராவணனையும், ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளையும் தோற்கடிக்கும் மக்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறு குழந்தைகளும் பெண்களும் குறிவைக்கப்படும் விதம் நெஞ்சை பதற வைக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. எனது வரவிருக்கும் படமான தேஜாஸ் மற்றும் இந்தியாவின் தன்னம்பிக்கை போர் விமானமான தேஜாஸ் பற்றி விவாதித்தேன்" எனவும் கூறியுள்ளார் கங்கனா.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!