துர்கா பூஜைக்கு வந்த கஜோல்... ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு!

நடிகை கஜோல்
நடிகை கஜோல்

சுவாமி தரிசனத்திற்காக கோயிலுக்கு நடிகை கஜோல் வந்த போது ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா முழுவதும் தசரா பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட இந்தியாவின் பல கோயில்களில் பூஜை கோலகலமாக நடைபெறுகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் பல சிறப்பு பூஜைகளில் பொதுமக்களும், பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை கஜோல் சரபோஜினி துர்கா ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். மஞ்சள் நிற சேலை அணிந்து காஜல் கோயிலுக்கு வந்திருந்தார். அப்போது, ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கோயில் நிர்வாகத்தினர் ரசிகர்களை அப்புறப்படுத்த சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு அங்கிருந்த ரசிகர்களுடன் கஜோல் செல்ஃபி எடுத்துவிட்டு கிளம்பினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in