சோகம்... நடிகை கஜோல் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

தாயாருடன் கஜோல்
தாயாருடன் கஜோல்

நடிகை கஜோலின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை கஜோல்
நடிகை கஜோல்

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் வரக்கூடிய கஜோலின் தாயார் தனுஜா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எண்பது வயதாகக்கூடிய தனுஜா பாலிவுட்டில் மூத்த நடிகை. வயது மூப்பு காரணமாகவே ஞாயிற்றுக் கிழமையான நேற்று மாலை அவர் மும்பையில் ஜூஹூ பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாயாருடன் கஜோல்
தாயாருடன் கஜோல்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தனுஜா குறித்து கஜோல் வட்டாரத்தினர் தெரிவித்ததாவது, ”தனுஜா தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவர் நலமாகவே இருக்கிறார். விரைவில் அவர் வீடு திரும்புவார். அவரைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை” என சொல்லப்படுகிறது. கஜோல் மற்றும் தனிஷா முகர்ஜியின் தாயாரான நடிகை தனுஜா, 'பஹரைன் பிர் பி அயெங்கி', 'ஜூவல் திருடன்', 'ஹாத்தி மேரே சாத்தி', 'மேரே ஜீவன் சதி' போன்ற பல பாலிவுட் படங்களிலும் பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பரபரப்பு... ஆளுநருக்கு எதிராக கல்லூரிகளில் பேனர்! களத்தில் இறங்கிய மாணவர் அமைப்பு!

கனமழை... களத்தில் சுழன்றடிக்கும் கனிமொழி எம்.பி

1000 ரூபாய் கடனுக்காக நண்பர் குத்திக்கொலை... சடலத்துடன் காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர்!

நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.207 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி

81 கோடி இந்தியர்களின் தரவுகள் திருட்டு... 4 இளைஞர்கள் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in