`என்னுடைய உடல் முன்பிருந்ததைபோல இல்லை'- `இந்தியன்2’ படத்துக்காகக் கடுமையான பயிற்சியில் காஜல்!

`என்னுடைய உடல் முன்பிருந்ததைபோல இல்லை'- `இந்தியன்2’ படத்துக்காகக் கடுமையான பயிற்சியில் காஜல்!

நடிகை காஜல் அகர்வால் ‘இந்தியன்2’ படத்துக்காகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடிக்கும் திரைப்படம் ‘இந்தியன்2’. கரோனா காலக்கட்டப் பிரச்சினைகளுக்குப் பிறகு ‘இந்தியன்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படுகிறது என சமீபத்தில் படக்குழு அறிவித்தது.

இதனையடுத்து குழந்தை பிறப்புக்கு பிறகு நடிகை காஜல் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இதற்காகக் கடுமையான குதிரையேற்றப் பயிற்சியில் நடிகை காஜல் ஈடுபட்டுள்ளார்.

குதிரையுடன் பயிற்சி எடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள காஜல், ``நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் உள்ளேன். குழந்தைப் பிறப்புக்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து நான் வேலைக்கு திரும்பி உள்ளேன். மறுபடியும் காயத்தில் இருந்து நான் தொடங்குகிறேன்.

என்னுடைய உடல் முன்பிருந்ததைபோல இல்லை. குழந்தைப் பிறப்புக்கு முன்பு உடல் செயல்பாடுகள், ஜிம்மில் வொர்க்கவுட் செய்வது போன்ற வேலைகள் செய்து வந்ததால், நீண்ட வேலை நாட்களை என்னால் சமாளிக்க முடிந்தது. ஆனால், குழந்தைப் பிறப்புக்கு பின்பு முன்பிருந்த அதே எனர்ஜி லெவலை கொண்டு வருவது என்பது கடினமாக உள்ளது.

குதிரை மேலே ஏறுவதும், அதில் சவாரி செய்வதும் எனக்கு பெரும் சவாலாக உள்ளது. முன்பு எனக்கு எளிதாக இருந்த மார்ஷியல் கலைக்கும் உடல் எளிதாக ஒத்துழைக்கவிலை. நம்முடைய உடல் மாறலாம், மாறாமல் போகலாம். ஆனால், நம்முடைய எல்லையில்லாத ஆர்வமும், ஆசையும் என்றும் மாறாதது. இதை நமக்கு நாமே தினம் உணர்த்தியாக வேண்டும். எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும். எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நம்முடைய தேர்வு குறித்து என்றும் நாம் கவலைப்படக்கூடாது.

‘இந்தியன்2’ படத்தில் மீண்டும் நான் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. வேலையின் பொருட்டு புதிய திறமைகளை வெறும் பொழுதுபோக்காகக் கருதாமல் கற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி. நான் வீடு போல நினைக்கும் இந்த சினிமாத் துறையில் நான் இருப்பதை அதிர்ஷ்டவசமாக நினைக்கிறேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்து. என்னை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு நான் எப்போதும் நன்றி உடையவளாக இருப்பேன்’ என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in