உறுதி செய்த தங்கை நிஷா: நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை!

உறுதி செய்த தங்கை நிஷா: நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை!

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தமிழில் பேரரசு இயக்கத்தில் 'பழனி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2020-ல் இவருக்கும் தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பது குறித்து யோசிப்பேம் எனவும் கணவருக்கு தேவைப்பட்டால் அவருடைய பிசினஸில் உதவியாக இருப்பேன் எனவும் அப்போது காஜல் தெரிவித்து இருந்தார்.

பல ஹிட் படங்களை கொடுத்துள்ளதாகவும் இனி குடும்ப வாழ்க்கையில் அதிக நேரம் செலவிடுவேன் எனவும் திருமணம் ஆன புதிதில் காஜல் கூறியிருந்தார். பின்பு திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே காஜல் கர்ப்பமானார். இதனால், 'இந்தியன்2' உள்ளிட்ட முக்கிய படங்களில் இருந்தும் அவர் விலக நேரிட்டது. தமிழில் கடைசியாக காஜல் நடிப்பில் 'ஹே சினாமிகா' படம் வெளியானது.

தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்த காஜல், கர்ப்ப காலத்தில் தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களுக்காக சமூக வலைதளங்களில் எழுந்த கேலி கிண்டலுக்கும் பதிலடி கொடுத்தார். 'தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மகிழ்ச்சியான காலக்கட்டம். உடலளவில் ஏற்படும் மாற்றங்களும் அப்படியே! இதை புரிந்து கொள்ளாதவர்கள் தான் தேவையில்லாத கமெண்டுகளை கொடுக்கிறார்கள். நான் என்னுடைய தாய்மையை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறேன். என் குழந்தைக்காக ஆவலுடன் எதிர்ப்பார்த்து உள்ளேன்' என கூறி இருந்தார்.

கர்ப்ப காலத்திலேயே பல விளம்பரங்கள், சமூக வலைதளங்களில் இன்ஃபுளூயன்ஸ் ஆக்டிவிட்டி என பிஸியாகவே இருந்தார் காஜல். இந்த நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

'உங்கள் அனைவருடனும் விரைவில் மகிழ்ச்சியான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்' என காஜலின் தங்கை நிஷா அகர்வாலும் சமூக வலைதளங்களில் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார். இப்போது காஜல்- கிச்சுலு தம்பதிக்கு ரசிகர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in