ஜோதிகா- மம்முட்டி இணையும் புதிய படம்!

ஜோதிகா- மம்முட்டி இணையும் புதிய படம்!

நடிகர் மம்மூட்டி- ஜோதிகா இருவரும் புதிய படம் ஒன்றிற்காக இணைந்திருக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு ‘16 வயதினிலே’, ‘பொன்மகள் வந்தாள்’ என தன்னுடையக் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கக் கூடிய படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. நடிப்பில் மட்டுமல்லாது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். நேற்று ஜோதிகாவின் 44-வது பிறந்தநாள். இதனை ஒட்டி, ஜோதிகா, மம்மூட்டி இணையும் புதிய படம் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மம்மூட்டி- ஜோதிகா இருவரும் இணைந்திருக்கும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்து ‘காதல்- தி கோர்’ எனப் படத்தின் தலைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குநரான ஜோ பேபியுடன் இணைகிறார். மம்மூட்டி- ஜோதிகா இருவரின் ப்ளாக் & வொயிட் புகைப்படத்துடன் நேற்று மாலை இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் போஸ்டரைத் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ட்வீட் செய்துள்ள நடிகர் சூர்யா, இந்தக் கதையைக் கேட்ட முதல் நாளில் இருந்தே பிடித்திருப்பதாகவும் படத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் கூறி தன் மனைவி ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் மம்மூட்டியும் இந்தப் போஸ்டரை வெளியிட்டு ஜோதிகாவுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார். கடந்த 2009-ல் ஜெயராமுடன் அவர் இணைந்து நடித்த ‘சீதா கல்யாணம்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா மலையாள சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in