எவரெஸ்ட் சிகரத்தில் ஜோதிகா ட்ரெக்கிங்... வைரலாகும் வீடியோ!

எவரெஸ்ட் சிகரத்தில் ஜோதிகா ட்ரெக்கிங்... வைரலாகும் வீடியோ!

எவரெஸ்ட் சிகரத்தில் நடிகை ஜோதிகா ட்ரெக்கிங் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. ’இதுவரை எந்த நடிகையும் எவரெஸ்ட் சிகரத்திற்கு ட்ரெக்கிங் செல்லவில்லை’ என்று ஜோதிகாவின் புதுமுயற்சியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தன்னுடைய இரண்டாவது இன்னிங்க்ஸில் அதிக படங்களில் நடிக்காமல் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகிறார் ஜோதிகா. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்து ஃபிட்னஸில் கவனம் செலுத்துவது, அதிக பயணம் செல்வது என நேரம் செலவிட்டு வருகிறார். குழந்தைகளின் படிப்பிற்காக மும்பை சென்று விட்டதால் இந்தி வெப்சீரிஸ், படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்திய மக்களவைத் தேர்தலில் கூட வாக்களிக்க வராமல் தோழிகளுடன் சுற்றுலா சென்றிருந்தார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் பாலிவுட்டில் வெளியான ‘சைத்தான்’ படம் ரூ. 100 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்று ஹிட்டடித்தது. இந்நிலையில், இமயமலைக்கு தனது தோழிகளுடன் டிரெக்கிங் சென்றிருந்த ஜோதிகா, அந்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அங்குள்ள சிறிய அறையில் தங்குவது, வழியில் உள்ள உணவகங்களில் கிடைத்த உணவை சாப்பிடுவது, பனிமழையில் நனைவது, டிரெக்கிங் முடித்து தோழிகளுடன் நடனமாடுவது என அங்கிருக்கும் சின்ன சின்ன விஷயங்களைக் கூட மகிழ்ச்சியுடன் அனுபவிப்பது என இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

’ஹீரோயின் ஒருவர் இமயமலைக்கு டிரெக்கிங் செல்வது இதுதான் முதல்முறை! எந்த ஹீரோயினும் செய்யாத புதுமுயற்சி’ என ஜோதிகாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!

பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!

தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!

கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in