‘இந்த விஷயம் சம்பந்தப்பட்டவர்கள் கையில் இல்லை!’ நடிகை ஜனனி அசோக்குமார் பேட்டி!

நடிகை ஜனனி அசோக்குமார்
நடிகை ஜனனி அசோக்குமார்

சின்னத்திரைக்கு இன்னொரு தமிழ் வரவு ஜனனி அசோக்குமார். ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் பரவலாக அறியப்பட்டவர். ‘ஆயுத எழுத்து’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என பல ஹிட் சீரியல்களில் நடித்தவர் தற்போது ஜீ தமிழின் ‘இதயம்’ சீரியலில் பயங்கர பிஸி. காமதேனு இதழுக்காக அவரிடம் பேசினோம்.

நடிப்புத்துறைக்குள் நீங்க வந்த கதையை சொல்லுங்க?

நடிகை ஜனனி அசோக்குமார்
நடிகை ஜனனி அசோக்குமார்

நான் ஸ்கூல், காலேஜ் படிச்சது எல்லாம் கோயம்புத்தூரில்தான். காலேஜ் படிக்கும் போது முடிந்தளவு நம் செலவை நாமே சமாளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால், லோக்கல் சேனல்களில் விஜே வேலைப்பார்த்தேன். அப்படியே வாய்ப்பு கிடைத்து சீரியல் வரை வந்தது. அதுவும் டிவியில் போய் வேலை பார்க்க வேண்டுமா என்று இந்த வேலையில் அப்பாவுக்கு ஆரம்பத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனால், போகப் போக புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்தார்.

வீட்டில் அப்பா செல்லமா நீங்கள்?

நடிகை ஜனனி அசோக்குமார்
நடிகை ஜனனி அசோக்குமார்

நானும் என் தங்கையும் இரண்டு பேரின் செல்லம்தான். ஒரு உண்மை சொல்லவா? நானும் என் தங்கையும் வயிற்றில் இருந்தபோது பெண் குழந்தைகள் தான் வேண்டும் என வேண்டிக் கொண்டார்களாம். அப்பா ஸ்கூல் பஸ் டிரைவர். அம்மா டெய்லர். அதனால், வண்டி ஓட்டுவதில் இருந்து சின்ன சின்ன விஷயங்கள் வரை நாங்களே சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று அப்பா- அம்மா இருவரும் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள். அவர்கள் கற்றுக் கொடுத்ததுதான் இப்போது வரை எங்களுக்கு உதவியாக இருக்கிறது. இந்த சமயத்தில் அவர்களுக்கு நன்றி.

இன்னும் மூன்று மாதங்களில் புது வருடம் பிறக்கப் போகிறது. இந்த வருடத்தில் நீங்கள் உங்களிடம் மாற்றிக் கொண்ட விஷயம் என்றால் எதை சொல்வீர்கள்?

நடிகை ஜனனி அசோக்குமார்
நடிகை ஜனனி அசோக்குமார்

நான் அதிகம் பேச மாட்டேன். புது நபர்களிடம் பேசுவதற்கு தயக்கமாக இருக்கும். அந்த விஷயத்தை நான் உடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுவும் இல்லாமல் எனக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். என்னிடம் உள்ள இந்த தயக்கத்தை பயணம் மூலம் உடைக்க வேண்டும் என்று நினைத்தேன். அது சரியான வகையில் எனக்கு உதவி செய்தது. இந்த வருடத்தில் கொஞ்சம் அதிகமாகவே பயணம் செய்து, புது நபர்களையும் நட்பையும் உருவாக்கி இருக்கிறேன்.

’இதயம்’ சீரியலில் சிங்கிள் மதராக நடித்து வருகிறீர்கள். சமூகத்தில் சிங்கிள் மதருக்கான பிரச்சினைகள் இன்றைய காலக்கட்டத்தில் எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?

நடிகை ஜனனி அசோக்குமார்
நடிகை ஜனனி அசோக்குமார்

இந்தக் கதை எனக்கு தனிப்பட்ட முறையிலும் கனெக்ட் ஆனது. என் நண்பர்கள், உறவினர்கள் வட்டத்திலும் இதுபோன்ற நிறைய பேரைப் பார்த்திருக்கிறேன். முன்பெல்லாம், கணவர் இறந்தாலோ பிடிக்காத வாழ்க்கை என்றாலோ அட்ஜெஸ்ட் செய்து வாழு என்பார்கள். ஆனால், இப்போது விவாகரத்தோ, சிங்கிள் பேரண்டிங்கோ எதுவுமோ சம்பந்தப்பட்டவர்கள் கையில் இல்லை, சமூகத்துக்காக எதையும் செய்ய வேண்டியதில்லை என்ற புரிதல் ஓரளவேனும் வந்துள்ளது.

அதைத் தாண்டி வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். அப்படியான துணை ஒரு பெண்ணுக்கு தேவைப்படுவது மிகவும் இயல்புதான் என்பதுதான் இந்த ‘இதயம்’ சீரியல். நிச்சயம் சிலராவது இந்த சீரியல் மூலம் மனம் மாறினாலும் மகிழ்ச்சி தான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in