`வலிமை’ வில்லனுக்கு ஜோடியான ஐஸ்வர்யா மேனன்

`வலிமை’ வில்லனுக்கு ஜோடியான ஐஸ்வர்யா மேனன்

`வலிமை' படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார்.

’ஆப்பிள் பெண்ணே’, ’தீயா வேலை செய்யணும் குமாரு’, ’வீரா’, ’தமிழ் படம் 2, ’நான் சிரித்தால்’ படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். இவர் இப்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு, யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதில் அஜித்தின் ’வலிமை’ படத்தில் வில்லனாக நடித்த கார்த்திகேயா ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தை பிரசாந்த் ரெட்டி இயக்குகிறார். கார்த்திகேயாவுக்கு இது 8-வது படம். இந்தப் படத்தைத் தொடர்ந்து இளம் நடிகர் நிகில் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். இந்தப் படத்தை கேரி இயக்குகிறார். இதைத் தவிர மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

இது தவிர சில தமிழ்ப் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என அவரது தரப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.