வைரல் புகைப்படம்... முதல் முறையாக மகனுடன் அவுட்டிங் சென்ற பிரபல நடிகை!

நடிகை இலியானா
நடிகை இலியானா

நடிகை இலியானா முதல் முறையாக மகனுடன் அவுட்டிங் சென்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தமிழில் ‘கேடி’ படம் மூலம் அறிமுகமான நடிகை இலியானா, விஜய்யின் ‘நண்பன்’ படம் மூலம் பிரபலமடைந்தார். பின்னர், தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர் பாலிவுட்டில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்காமலேயே தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் பின்னர் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததையும் சமூக வலைதளத்தில் அறிவித்தார் இலியானா.

குழந்தையுடன் இலியானா
குழந்தையுடன் இலியானா

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் மைக்கேல் டோலனை இலியானா காதலிப்பதாக தகவல் பரவியது. பின்னர் அந்தத் தகவல் உண்மைதான் என்பதையும் இலியானா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருவரும் கடந்த மே மாதம் 13ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

குழந்தையுடன் இலியானா
குழந்தையுடன் இலியானா

குழந்தைக்கு கோயா பீனிக்ஸ் டோலன் என்று பெயரிட்டுள்ளனர். குழந்தையுடன் நேரம் செலவிட்டு வரும் இலியானா, முதல் முறையாக தனது மகனுடன் மதிய உணவிற்காக அவுட்டிங் சென்றுள்ளார். ‘இந்த சிறிய முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் என மனம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கிறது’ எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in